நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, February 4, 2019

பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களே கஞ்சாவுடன் கைதாகினர்!

நேற்று (4) நள்ளிரவு வரணிக்கு அருகில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் 71 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாண நகரத்திலிருந்து இவர்களை பின்தொடர்ந்த பொலிஸ் புலனாய்வாளர்கள், வரணிக்கு அண்மையில் மடக்கிப்பிடித்திருந்தனர்.

கைதான இருவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் மகனும், இன்னொரு உறுப்பினரின் மருமகனுமே கைதாகியுள்ளனர்.

கட்டைக்காடு 12ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினரின் மகனான தங்கராசா நிசாந் (25) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஈ.பி.டி.பியின் விகிதாசார உறுப்பினரின் மருமகனான ஞானசேகரன் ரகு (37) ஆகியோரே கைதாகியுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேசசபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குடும்பங்களில் இருந்து கஞ்சாவுடன் இருவர் கைதாகிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.