நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, February 12, 2019

யாழில் பெண்ணை தாக்கிய இரு இளைஞர்களிற்கு நேர்ந்த கதி


   
   
   
  தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில் கொள்ளையிட்டனர்.

இதன் போது 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், பின்னர் குடும்ப பெண்ணின் தலையை பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை கட்டுவான் பகுதி மற்றும் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

   
   
   
  கைது செய்யபட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!