நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, February 6, 2019

தற்கொலைகள் இடம்பெற்ற கல்லடிப் பாலத்தை மகிழ்ச்சி பாலமாக மாற்றிய இளைஞர்கள்!

கல்லடிப்பாலத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல தற்கொலைகள் இடம் பெற்று வந்ததால் கல்லடிப்பாலத்தில் தற்கொலை என்ற செய்திகளே ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

தற்கொலைகளை தடுக்கும் செயற்திட்டங்கள் உளவியல் ஆலோசனை மய்யத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளை சிறப்புமிக்க கல்லடிப்பாலம் எப்போதும் மகிழ்ச்சியான பாலமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது கல்லடி பாலத்தில் இளைஞர்கள் தங்களது நண்பர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டதுடன் இன்றும் இளைஞர்கள் தங்களது நண்பரின் பிற்தநாளை கல்லடி பாலத்தில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

கல்லடி பாலம் எப்பபோதும் மகிழச்சியான பாலமாகவே இருக்கும்.