நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, February 7, 2019

நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரச்சனையால் சிக்கித் தவிக்கும் இயக்குனர் சுராஜ்!

Thursday, February 07, 2019
Tags


#vadivelu_new_flim

இம்சை அரசன் திரைப்படப் பிரச்சனை காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள பல திரைப்படத்திலும் நடிக்க முடியாத நிலையில் வடிவேலு உள்ள நிலையில் இயக்குநர் சுராஜ் தனது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக வடிவேலுவுக்காய் காத்திருக்கின்றார்.

‌இயக்குனர் சங்கரின் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துச் சில நாட்களிலேயே முடங்கியுள்ளது. படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வடிவேலு இத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக வடிவேலு எந்த விதமான விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தீர்க்கப்படும்வரையில், வேறு எந்தவொரு திரைப்படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், வடிவேலுவிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளர்கள் பலரும் இந்த பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முக்கியமாக இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருகின்றார்.

விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க புதிய படம் ஒன்றை இவர் இயக்கவுள்ளார். திரைப்படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவுசெய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பை ஆரம்பிக்க சுராஜ் காத்திருக்கிறார். எனினும் இம்சை அரசன் படத்தின் பிரச்சினை முடிவுக்கு வராமையினால் தொடர்ந்து திரைப்படம் இழுபறியில் காணப்படுகின்றது.