நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, February 11, 2019

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது!

  விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகத எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினம் விடுமுறை என்பதனால், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்போது அதிகரித்துள்ள பின்னணியில், இன்றைய தினம் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்துக்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை மூன்று ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.