நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, February 1, 2019

மட்டகளப்பில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்

Friday, February 01, 2019
Tagsகுளக்கரைக்குச் சென்ற மாடொன்றை குளத்தில் பதுங்கியிருந்த முதலை அடித்து இழுத்துச் சென்ற சம்பவமொன்று மட்டக்களப்பு பெரியபோரதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.எருமை மாடுகள் அக்குளக்கரையில் மேய்வதும், அக்குளத்தில் உறங்குவதும் வழக்கம்.

அதுபோல் இன்றையத்தினமும் எருமை மாடொன்று அக்குளத்திற்குச் சென்ற வேளை அதனை முதலை அடித்து இழுத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.இதனை அவதானித்த பயணிகள், முதலையை துரத்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனைப் பொருட்படுத்தாத முதலை மாட்டை அடித்து இழுத்துச் சென்றதாக இதனை நேரில் கண்ட நபர்கள் தெரிவித்தனர்.