நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, February 5, 2019

புகைப்படம் எடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுவிப்பு

  ஹொரவபொத்தானை - கிரலாகல புராதன பிரதேசத்தின் மீதேறி புகைப்படம் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று கெப்பித்திகொல்லேவ நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கெப்பித்திகொல்லேவ நீதவான் எச்.கே.மாலிந்த ஹர்சன டி அல்விஸ் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மாணவர்கள் மீது மதங்களுக்கு இடையில் முறுகல் ஏற்படுத்தியமை சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் பிரவேசித்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
   
இதன்போது அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டிற்கும் முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டிற்கு அரசு செலவாக ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் கட்டளையிட்டு, அவர்களை விடுவித்தார்.