நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, February 1, 2019

உருளைக்கிழங்கின் இறக்குமதியை 50ரூபாவாக பெற்று கொடுக்க நடவடிக்கை!!

நாட்டின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள், அவற்றை செயன்முறை படுத்தும் வகையில், உருளைக்கிழங்கு செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கும், அறுவடையின் பயன்களை எமது நாட்டு விவசாய உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பாதிப்படையாத வகையில் பெற்றுக்கொள்ளும் முகமாக இறக்குமதி வரி 50 ரூபாவாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் கிராம சக்தி செயற்திட்டத்தின், முன்னிலைப்படுத்தப்பட்ட செயற் திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதி அவர்களின் யாழ் விஜயத்தின் போது விவசாய அமைப்புக்கள், உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்கும் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.