onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, February 8, 2019

இலங்கை ராவணன் பூமி என்பதற்கான 20 ஆதாரங்கள்!

  admin       Friday, February 8, 2019


   
   
   
  ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள். இச்சான்றுகள் இலங்கையில் ராவணன் ஆட்சி செய்தான் என்பதனையும், இராமாயணம் எனும் இதிகாசம் இலங்கையில் நடந்தேறியது என்பதனை பறைச்சாற்றுவதாக அமைகின்றது.

வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது.

ராவண கோட்டே: ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள்.

சீதா கோட்டுவா: சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந்ததாகக் கூறுவர்.

அசோக் வாடிகா: சீதையைத் தேடி ஸ்ரீராமன் வருகிறான் என்பதை அறிந்த ராவணன், சீதா கோட்டுவாவில் இருந்த சீதாதேவியை ரதத்தில் ஏற்றி, இந்த இடத்துக்கு அழைத்து வந்து சிறை வைத்தானாம். சீதா கோட்டுவாவில் இருந்து அசோக் வாடிகா செல்லும் வழியில், ராவணனின் ரதம் சென்ற பாதையையும் அசோக் வாடிகாவில் சீதையின் கோயிலையும் காணலாம்.

ராவணகோடா: சீதாதேவியை பல இடங்களில் ராவணன் மறைத்து வைத்திருந்தானாம். அப்படி ஒரு மலைக் குகையையும் அதற்கான பாதையையும் உள்ளடக்கிய பகுதியே இந்த ராவணகோடா. சீதாதேவி சிறை வைக்கப் பட்ட வேறு சில இடங்கள், நுவரேலியா அருகிலுள்ள சீத்த எலியா மற்றும் இஸ்திரீபுரா.

ஸ்திரீபுரா: 100 மீட்டர் நீளமுள்ள குகைகளுடன் கூடிய மலைப் பகுதி. சீதைக்குக் காவலாக பெண்கள் பலரை ராவணன் நியமித்த இடம் இது.

சீதை கண்ணீர்க் குளம்: கணவனைப் பிரிந்த துக்கத்தில் சீதாதேவி சிந்திய கண்ணீரில் உருவான குளத்தையே கண்ணீர்க் குளம் என்கிறார்கள். இந்தக் குளத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் பூத்துக் குலுங்கும் மலர்களை ‘சீதை பூக்கள்’ என்கிறார்கள்!

கொண்ட கலை: ராவணன் தன்னைக் கடத்தி வந்தபோது, தான் செல்லும் திசையை அடையாளம் காட்டுவதற்காக… சீதாதேவி, இந்த இடத்தில் தன் அணிகலன்கள் சிலவற்றை விட்டுச் சென்றாளாம்.

   
   
   
 

சீதா கூலி: கடத்தி வரும் வழியில், ராவணன் தனக்கு உண்ணக் கொடுத்த அரிசி உருண்டையைத் தூர எறிந் தாள் சீதா. அந்த உருண்டை சிதறி விழுந்த இடம்.

மாலிகா தென்னா வெளி மாடா: ராவணனின் அரண்மனை அமைந்திருந்த இடம் என்கிறார்கள். தற்போது விவசாய பூமியாக காட்சி தருகிறது (அரண்மனை, கடலில் மூழ்கி விட்டதாம்!).

உஷஸ்கோடா: ஸ்ரீஅனுமனது வாலில் நெருப்பு வைக்கப் பட்ட இடம். இலங்கையில் நீலாவாரி (பஞ்சமுக அனுமன்) மற்றும் இரட்டோட்டா (பக்த அனுமன்) ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன. இலங்கையில் இரட்டோட்டா எனும் இடத்தில் மட்டுமே ஸ்ரீராமனின் பெயரில் கோயில் அமைந்துள்ளது.

நீலாவரி: தன்னுடன் இலங்கைக்கு வந்த வீரர்களது தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, ஸ்ரீராமன் தனது அஸ்திரத்தை ஏவி உருவாக்கிய திருக்குளம் இது.

யுத்த கணவா: ராம- ராவண யுத்தம் நிகழ்ந்த இடம். ராவண சேனைகளுக்கும் வானரர்களுக்குமான யுத்தத்தின் பெரும்பகுதி, ‘வாஸ்காமுவா’ எனும் இடத்தில் நிகழ்ந்த தாம். யுத்தம் நிகழ்ந்த வேறு இடங்கள்: துணுவிலா, எலக்கே, லக்சுலா. இந்தப் பகுதிகளில் வெறும் புற்கள் மட்டுமே விளைகின்றன.

கன்னியா: ராவணன், தன் தாயாருக்கு இறுதிக் கடன் ஆற்றிய இடம்.

உனவாதுவா: அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் சிதறல்கள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று. மற்றவை: ருமஸ்ஸலா, தொலுகண்டா, ரிட்டிகலா, தைலடி, அட்சத்தீவு ஆகிய இடங்களாகும். உனவாதுவா என்றால், ‘அங்கே அது விழுந்தது’ என்று பொருள்! மூலிகைகள் நிறைந்த பகுதி இது.

யகங்சுலா: ராவணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி! இங்குள்ள ‘திவன்’ எனும் பாறையில்தான் அவனது

உடலை அடக்கம் செய்தாகவும், இலங்கையின் மன்னன் என்பதால், ராவணனின் உடலுக்கு ஸ்ரீராமன் மரியாதை செலுத்தினார் என்றும் கூறுவர்.

திவிரும்போலா: சீதாதேவி, தனது கற்பின் மாண்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்து மீண்ட இடம்.

வந்தாரமுலே: வெற்றிக்குப் பிறகு, சீதாதேவியுடன் ஸ்ரீராமன் ஓய்வெடுத்த இடம். இங்குதான் அவர்கள் தங்களது மண வாழ்க்கையை மீண்டும் துவங்கினர் என்றும் கூறுவர்.

அமரந்த கலி: போருக்குப் பின் ஸ்ரீராமரும் சீதையும் உணவு அருந்திய இடம் இது!

முன்னீஸ்வரம்: ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான ஸ்ரீராமன், இலங்கையில் உள்ள முன்னீஸ்வரம் சிவபெருமானை வழிபட்டாராம். அத்துடன் நான்கு இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தும் பூஜித்தாராம். அந்த இடங்கள், மணவாரி, கோகலிங்கம், திருச்சேதிஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் (தமிழகம்). 

இலங்கை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை, ‘ராமாயணச் சுற்றுலா’ என்ற பெயரில் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது அனைவரும் வியப்புடனும் பக்தியுடனும் இந்த சுற்றுலாவில் பங்கேற்கின்றனர்.

logoblog

Thanks for reading இலங்கை ராவணன் பூமி என்பதற்கான 20 ஆதாரங்கள்!

Previous
« Prev Post