நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, February 14, 2019

சுற்றுலாவுக்கு உகந்த முதல் 10 நாடுகள் இலங்கைக்கு முதலிடம்

Thursday, February 14, 2019
Tags


   
   
   
  உலக அளவில் சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் பிரசித்திப்பெற்ற லோன்லி பிளானட் என்ற இணையதளம் இந்த ஆண்டின் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் மூன்றாவது இடத்தில் சிம்பாப்வேவும் உள்ளன.

குறித்த பட்டியலில் இதுவரை சுற்றுலாவில் பிரபலமாகாத பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த விகையில் மத்திய ஆசியாவிலுள்ள கிர்கிஸ்தான் என்ற நாடு 5-வது இடத்தில் உள்ளது.

சீனாவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள குறித்த நாடானது சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன பட்டியலில் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை. அத்தோடு கினியா வளைகுடாவில் அமைந்துள்ள சாவ் டோம் மற்றும் பிரின்சிபி தீவுகளும் சுற்றுலாவுக்கான பட்டியல்களில் இதுவரை சர்வதேச அளவில் இடபெறவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.
   
   
   
 

சுற்றுலாவுக்கு உகந்த முதல் 10 நாடுகள்

இலங்கை

ஜேர்மனி

சிம்பாப்வே

பனாமா

கிர்கிஸ்தான்

ஜோர்டான்

இந்தோனேசியா

பெலாரஸ்

சாவ் டோம் மற்றும் பிரின்சிப்பி

பெலிஸ்