Thursday, January 3, 2019

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு அரச அலுவலகத்தில் வேலைசெய்யும் அதிகாரிகளின் வருட இறுதி குத்தாட்டம். Video இணைப்பு,,,

https://youtu.be/RRtYdsJGgW4
யாழ். டிப்போவில் புத்தாண்டுக் குத்தாட்டம் (Video)


வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவான தாயக உறவுகள் வெள்ள அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளர் கேதீசன் கோண்டாவிலுள்ள யாழ். சாலை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இணைந்து களியாட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்து நடாத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாக அதிகாரிகளும்,நிர்வாக உத்தியோகத்தர்களான பெண்களும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர். குறித்த நிகழ்வு கடந்த-31 ஆம் திகதி காலை-09 மணி முதல் பிற்பகல்- 03 மணி வரை இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பெருமளவான தாயக உறவுகள் வெள்ள அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதை விடுத்து இவ்வாறான களியாட்ட நிகழ்வுகள் தேவைதானா? என இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் என்ற வகையில் பல்வேறு நிர்வாக முறைகேடுகள் புரிந்துள்ளதாக இவர் மீது ஏற்கனவே ஊழியர்களால் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி கடந்த மாதம் டிசம்பர் மாதம் முதல் ஊழியர்களால் தொழிற்சங்கப் போராட்டம் நடாத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த தொழிற்சங்கப் போராட்டங்களுக்கான தீர்வுகள் எதுவும் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மேற்படி களியாட்ட நிகழ்வுகளை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளர் கேதீசன் ஏற்பாடு செய்து நடாத்தியிருப்பதன் மூலம் தாம் நிர்வாகத் திறமையற்றதொருவர் என குற்றம் சாட்டியுள்ளமையை மீண்டுமொரு தடவை மெய்ப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் எம்முடன் கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இதுபோன்று வருட இறுதிநாளில் களியாட்ட நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையின் முக்கிய அமைச்சரொருவர் எங்களது பொதுமக்களின் அவலநிலையைக் கண்டு கிணற்றிற்குள் இறங்கி சேறு அள்ளி சுத்தம் செய்த சம்பவமொன்று அண்மையில் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தது.

ஆனால்,இதுபோன்ற சம்பவங்களைக் கேள்விப்படும் போது நெஞ்சம் வெடிக்கின்றது.”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்…” என்ற எண்ணம் தோன்றுகின்றது.

வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் தமிழகத் தாய்க் கொடி உறவுளாலும் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் துன்பப்படும் எமது மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்யாவிட்டாலும் அவர்கள் படும் துன்பத்தை எண்ணியாவது இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாம்.

கோண்டாவிலில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலையில் கிறிஸ்தவ ஊழியர் சங்கம் வருடாவருடம் ஒளிவிழா நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்தி வந்துள்ளது.

ஆனால், இந்தத் தடவை கிறிஸ்தவ ஊழியர் சங்கம் வழமை போன்று ஒளிவிழா நிகழ்வு செய்வதைத் தவிர்த்து அந்த நிதியை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருந்தது. இந்தச் செயற்பாடு ஒரு முன்மாதிரியானதொன்றாக அமைந்துள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளரின் செயற்பாடு பெரும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி நிகழ்விற்கான குளிர்பானச் செலவுகள், உணவுச் செலவுகள், மதுபானச் செலவுகள் உட்பட சுமார் ஒரு இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. குறித்த நிகழ்விற்கான செலவு நிதி எங்கிருந்து பெறப்பட்டது? என்பது தொடர்பிலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka