நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 30, 2019

இலங்கையர்களை அச்சுறுத்தும் ரம்பாவின் தாக்கம் எப்படி இருக்கும்? உடனே share பண்ணுங்கள்! பெருந்தொகை பணம் செலுத்த வேண்டுமா?


   
   
   
  கணனிகளை இலக்கு வைத்து தாக்கி வரும் புதிய வைரஸ் தொடர்பில் அனைவரும் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

7, 8.1, 10 பதிப்புகளை இலக்கு வைத்து ரம்பா எனப்படும் வைரஸ் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கணனிக்குள் நுழைவதன் மூலம் அங்குள்ள அனைத்து தரவுகளையும் மீளவும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த தரவுகளை மீளவும் பார்க்க வேண்டும் என்றால் அந்த வைரஸ் கட்டமைப்பை தயாரித்த கும்பலுக்கு ஒரு தொகை பணம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

கணனிகளில் இலவசமாக தரையிறக்கம் (Download) செய்யப்படுகின்ற லிங்குகளின் ஊடாக ரம்பா வைரஸ் கணனிக்கு நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

   
   
   
  காணொளிகளை எடிட் செயற்வதற்காக தரைவிறக்கம் செய்யும் செயலிகள் மற்றும் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல் Attachment அல்லது லிங்கள் ஊடாக ரம்பா வைரஸ் கணனிகளை தாக்குகிறது.

தரையிறக்கம் செய்வதற்காக பயன்படுத்தும் டொரென்ட் (Torrent) என்ற செயலிகளினால் மிக வேகமாக ரம்பா வைரஸ் கணனிக்கு தொற்றிவிடுகின்றது.

அவ்வாறு குறித்த வைரஸ் தொற்றினால், தங்கள் கணனிகளில் உள்ள ஆவணங்கள், புகைப்படங்கள் காணொளிகள் போன்றவற்றை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அந்த ஆவணங்களை மீளவும் பார்ப்பதற்கு ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பணம் கேட்கப்பட்டால் செலுத்த கூடாதென கணனி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை ரம்பா வைரஸ் தாக்கம் தொடர்பில் இலங்கையில் 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இலவச தரையிறக்கங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தரையிறக்கம் செய்தால் தரையிறக்கம் செய்யப்படுகின்ற லிங்க் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய ஆவணங்கள் இருந்தால் அவை கணனியுடன் தொடர்புப்படாத வகையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கணினி அவசர பிரிவு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுள்ளது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!