நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 4, 2019

யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Friday, January 04, 2019
Tags


யாழிலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில், விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த ஆறு பாடசாலைகளும், நுளம்புகள் பரவும் இடங்களை பேணி வந்தாக கூறியே சுகாதார பிரிவினர், யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கலொன்றை நேற்று செய்துள்ளனர்.

இதேவேளை, வேளை நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்.பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் காணப்படுவதாக, சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.