நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 16, 2019

தமிழ்க் கூட்டமைப்பினர் நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று தமிழர் தரப்பின் ஏகோபித்த ஆதரவோடு பெரும்பான்மையைப்  பெற்று ஆட்சியமைத்திருந்தாலும் எந்நேரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அந்த  ஆட்சியைக் கவிழ்க்கலாம். இலங்கையின் அரசியல் துவாரத்தை சர்வதேச சமூகத்திற்கு ஒரே இரவில் காட்டிக் கொடுக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தைப் பெறலாம்.

ஆனால், சிங்கள மக்களுக்கு தமிழர் தரப்பின் மீது நம்பிக்கைய ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் வேலை செய்துகொண்டு, பையிலிருக்கும் கத்தியை எடுத்து அடிக்கடி வெளியே காட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அவநம்பிக்கையோடும் அச்சத்துடனும்தான் பார்த்துக் கொண்டிருப்பர். ஆக, எங்களிடமுள்ள பலத்தையே பலவீனமாகவும் முன்னிறுத்திவிடக்கூடாது” என்று சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.