நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 31, 2019

நீதியை அவமதித்த விக்னேஸ்வரன்... தண்டனை ஒத்தி வைப்புவட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கல், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண அமைச்சராக இருந்த ப.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை அமுலாக்க தவறியமைக்காக விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கடந்த விசாரணையின் போது மேன்முறையீட்டு நீதிமன்றால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தீர்ப்பு தயாராகத நிலையில் அதனை எதிர்வரும் ஃபெப்ரவரி 13 வரையில் மீண்டும் ஒத்திவைப்பதாக நீதியரசர் ஜெனட் டி சில்வா அறிவித்தார்.