நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 10, 2019

வாகனங்களுக்கு காபன் வரி

Thursday, January 10, 2019
Tags


ஜனவரி மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில், வாகனங்களுக்காக காபன் வரி அறவிடப்படவுள்ளது.

அரசாங்கம் பசுமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்குகிறது. இதன் கீழ், 2018ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு வாகன உரிமையாளர்களிடமிருந்து சிறுதொகை காபன் வரியாக அறவிடப்படும்.

இந்தத் தொகை எஞ்சின் கொள்ளளவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட உள்ளது. வாகனத்தை பதிவு செய்யும் வருடத்தில் அன்றி வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சந்தர்ப்பங்களில் காபன் வரியைச் செலுத்த வேண்டும். பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளிடமிருந்து வருடாந்த கட்டணமாக காபன் வரி அறவிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.