நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, January 19, 2019

கொழும்பில் பதற்றம் - எரிந்த நிலையில் சடலம் மீட்பு

கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் கோல்பேஸ் கோட் ஒழுங்கையில் உள்ள வீட்டில் எரிந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு நேற்று முற்பகல் 11.45 அளவில் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வீட்டிற்குள் அறை ஒன்றில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோக்கந்தர வடக்கு, அரங்கல, அத்துருகிரிய என்ற முகவரியை சேரந்த 49 வயதான சேனக ஸ்ரீ லால் ஜயசிங்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.