நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

யாழில் அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி

Sunday, January 13, 2019
Tags


முச்சக்கர வண்டி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த வாகனம் இனம்தெரியாத நபர்களால் இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றை நபர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்திருந்தேன். அதற்கான பணத்தைக் கட்டம் கட்டமாகச் செலுத்தி வந்தேன். அவ்வாறு செலுத்தியதில் மிகுதியாக 10 ஆயிரம் ருபா பணம் கொடுக்க வேண்டியிருந்தது .அதில் கொள்வனவு செய்த முச்சக்கர வண்டியின் மேலதிக சில்லு தரவேண்டி இருந்தது. ஆகவே அதனைத் தந்தவுடன் மிகுதிப் பணத்தைத் தருவதாக கூறியிருந்தேன்

இன்று காலை வந்த இருவர் மிகுதிப் பணத்தினை தருமாறு கோரினர். அப்போது மேற்படி விடயத்தை கூற அவர்கள் எம்முடன் முரண்பட்டனர். முச்சக்கர வண்டியை அடித்துடைத்தனர்.

இது தொடர்பில் நாம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளோம்.என்று முச்சக்கர வண்டி உரிமையாளர் தெரிவித்தார்.