நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

வடமராட்சியில் கொடூரமாக கோடாரியால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!!

Sunday, January 13, 2019
Tags


   
   
   
  கோடாரிப் பிடியால் தாக்கப்பட்ட இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி கற்கோவளம் தண்ணீர் பந்தலடிப்பகுதியில் நேற்று இரவு 8.30. மணியளவில் நடந்துள்ளது.

கற்கோவளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வாசுதேவன் அமல்கரன் என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.

இளைஞன் மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிற்றுண்டி விற்பனை செய்யும் முச்சக்கரவண்டி வாகனத்தை அவருடைய நண்பர் மறித்து றோல்ஸ் கேட்டதாகவும், இதன் போது ஏற்பட்ட தகராறில் உறவினர்களால் இளைஞன் கோடரி பிடியால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

   
   
   
  நேற்றிரவு 11 மணியளவில் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் இளைஞன் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.