நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, January 7, 2019

சபாநயகர் தலைமையில் கூடும் பாராளுமன்றம்

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியது.இப் பேரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் தலதா அத்துக்கோரள, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, கலாநிதி தனபால ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக எஸ். துரைராஜா மற்றும் ஆர். அமரசேகர ஆகியோரை நியமிக்கவும் பத்மன் சூரசேனவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கவும் அரசியலமைப்பு பேரவை இதன்போது அனுமதி வழங்கியதுடன், இவற்றுக்கான சிபாரிசுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்திருந்தார்.