புதிய அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த மதகுரு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
கொழும்பு – கோட்டை அரசமரத்தடியில் இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த மதகுருவே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பினூடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘ஸ்ரீலங்காவில் கடற்படைத்தளம் அமைக்கும் முயற்சிகளை அமேரிக்கா நிறுத்த வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகளும், இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கூடிய பதாதைகளும் அவர் அமர்ந்துள்ள இடத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
0 கருத்துரைகள்:
Note: Only a member of this blog may post a comment.