நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 16, 2019

இன்றைய நாளில் வல்வையில் - கிட்டுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்


இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன்.
இதற்கு முந்தைய நாள் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வங்காள விரிகுடா கடற்பகுதியில் கப்பல் ஒன்றுடன் சேர்த்து தற்கொலை செய்துகொண்ட 'கிட்டு' எனப் பொதுவாக அழைக்கப்பட்ட  விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரான சதாசிவம் கிருஸ்ணகுமார் உட்பட்ட 10 விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தவே  பிரபாகரன் வல்வைக்கு வந்திருந்தார்.
அன்றைய தினம் மாலை இடம்பெற்ற குறித்த இந்த அஞ்சலி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
மிகவும் அரிதாகவே பொது இடங்களில் பொது நிகழ்வுகளில் பொது மக்கள் முன்தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்த பிரபாகரன் அவர்கள், ஆயிரக் கணக்கான பொது மக்கள் முன்பு கலந்துகொண்ட மிகச் சில நிகழ்வுகளில் இதுவே இறுதியானது எனவும் கூறப்படுகின்றது.
   
   
   
 
நிகழ்வில் சூசை, கடாபி உட்பட்ட மேலும் பல விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களை அன்றைய யாழ் பத்திரிக்கைகள் பிரசுரித்திருந்தன.
பிரபாகரன் அவர்கள் கிட்டுவிற்கு அஞ்சலி செலுத்திய மற்றும் கிட்டுவின் தாயாருக்கு ஆறுதல் கூறும் புகைப்படங்களும் அன்றைய யாழ் தினசரிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. 


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!