நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

அஸ்மினின் அரசியல் தஞ்சத்திற்காகவே அனந்தியின் கைத்துப்பாக்கி விவகாரம் உபயோகிக்கப்பட்டது?

Thursday, January 03, 2019
Tags


வடமாகாணசபையின் முன்னாள் நியமன உறுப்பினர் அயுப் அஸ்மின் கனடாவில் குடியேறியதை தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்மினின் கனடா விசாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே ஒழுங்கு செய்துகொடுத்துள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆயிரத்திற்கும் குறைவாக வாக்கையே அவர் பெற்றிருந்தார். எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடைக்கண் பார்வை பட்டு, நியமன உறுப்பினரானார். பின்னர், அவரை நீக்கிவிட்டு புதியவரை நியமிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைகீழாக நின்று பார்த்தது. முடியவில்லை.

வடமாகாணசபைக் குழப்பங்களிற்கு காரணமாக பின்னணியிலிருந்து சதி திட்டங்கள் தீட்டியவரில் அஸ்மினும் ஒருவர் என பகிரங்கமாகவே சில மாகாணசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மாகாணசபைக்குள்ளும் முதலமைச்சரை செயற்பட விடாமல் குடைச்சல் கொடுத்தவர்களில் அவரும் ஒருவர். இந்த நன்றிக்கடனோ என்னவோ, தமிழரசுக்கட்சியை இயக்கும் கனடிய தமிழ் காங்கிரசும் அஸ்மினின் விசாவிற்கு உதவியுள்ளது.

ஏற்கனவே இரண்டு வருட மல்டி விசா அஸ்மின் பெற்றதற்கு, கனடிய தமிழ் காங்கிரஸ்தான் உதவிபுரிந்துள்ளது. பின்னர் அஸ்மினின் மனைவி, பிள்ளைகளும் கனடிய விஸா பெற்றுள்ளனர்.

தற்போது கனடாவில் குடியேறி அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். இந்த இடத்தில்தான் அஸ்மினின் “பக்கா பிளானை“ வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் வடக்கு அரசியலில் இருந்தபோது, பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்து கொண்டிருந்தது இந்த விசா திட்டத்துடன்தான். இங்குள்ள எதிர்ப்புக்களை காண்பித்தே அவர் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

அஸ்மினின் வலதுரமாக செயற்பட்ட ஒருவர், சுமார் ஆறு மாதங்களின் முன்னர் தமிழ்பக்கத்திற்கு ஒரு இரகசிய தகவல் தந்தார். அதன்படி- “கனடா அல்லது சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருவதற்காகவே, அவர் சர்ச்சைக்குரிய விடயங்களை பேசுகிறார். செய்கிறார். அரசியல் தஞ்சம் குறித்து கட்சிக்குள் மிக முக்கியமான சிலருடன் அவர் பேசியுமிருக்கிறார். அவர்களின் சம்மதத்துடன்தான் இந்த திட்டம் அரங்கேறுகிறது“ என்றார். என்றாலும், அதை அப்போது உறுதிசெய்ய முடியவில்லையென்பதால், அப்போது வெளியிடாமல் தவிர்த்திருந்தோம்.

தற்போது கிடைக்கும் தகவல்படி, அஸ்மினின் அரசியல் தஞ்ச கோரிக்கையில்- அனந்தியின் கைத்துப்பாக்கி விவகாரத்தை தான் பேசியதால் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட பல விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மாகாணசபை காலத்தில் அஸ்மின் சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்க உள்ளூரில் நிறைய அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. உள்ளூரில் பலர் மோதிக் கொண்டார்கள்.

தமது சொந்த வாழ்க்கையையே தமிழ் அரசியலிற்காக இழந்தவர்களின் காலத்தில், தமிழ் அரசியலையே சொந்த வாழ்க்கைக்காக பாவித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!