நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

விடுதலைப் புலிகளுக்கு பயந்து பதுங்கியிருந்தவர்களின் மோசமான செயல்!

Tuesday, January 01, 2019
Tags


இராணுவம் தொடர்பிலான பொய்ப் பிரச்சாரங்களை வடக்கு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

வடக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி ஒளிந்திருந்தவர்கள் இன்று வடக்கில் இராணுவத்திற்கும் அப் பகுதி மக்களுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

மழை வெள்ளம் மட்டுமன்றி எந்தவொரு அனர்த்த நிலைமைகளின் போதும் இராணுவத்தினர் விரைந்து செயற்பட்டு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த உதவிகளை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் காழ்ப்புணர்ச்சியில் படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இராணுவத்தை விமர்சனம் செய்யும் இந்த நபர்கள் வடக்கு மக்களுக்காக எதனையும் செய்தது கிடையாது.

இராணுவத்தை இழிவாக திட்டித் தீர்க்கும் குறித்த நபர்கள் அன்று இராணுவத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார்கள்.

இன்று அவர்கள் கார்ட்போர்ட் வீரர்களாக பரிணமித்துள்ளனர் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.