நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 18, 2019

யாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை! பதறுகிறார் மனைவி..

யாழ்.கோண்டாவில் பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் வடக்கு துவாரகை வீதியினைச் சேர்ந்த நாற்பது வயது மதிக்கத்தக்க விஜயன் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று அதிகாலை நான்கு மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும், இவர் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
   
   
   
  இதேவேளை, காணாமல் போன நபரின் முக்கிய உடைமைகளான கைத்தொலைபேசி மற்றும் உந்துருளி போன்ற எதனை அவர் எடுத்துச் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று வீட்டிற்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் வழமைபோலவே பேசிவிட்டு உறக்கத்திற்குச் சென்றவரை அதிகாலைப் பொழுதில் காணவில்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். இவர் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இவரது குடும்பத்தினரிடமோ தெரியப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் - 0212224022 குடும்பத்தார் தொலைபேசி இலக்கம் - 0770237514 இதேவேளை,
   
   
   
  மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், கோண்டாவில் பகுதியில் வெற்றிக்கண்ணன் எனும் பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை தனது சகோதரருடன் இணைந்து நடத்திவந்த நிலையில் சமீப காலமாக கடும் நஷ்டத்தினாலும் கடன் தொல்லையினாலும் அவதியுற்றுவந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!