நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

Tuesday, January 01, 2019
Tagsகளுத்துறை – தொட்டுபல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்து நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10.35 மணியளவில் மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சுட்டில் களுத்துறை – வடக்கு பகுதியை சேர்ந்த 57 வயதான நபரொருவரே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளவர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.