நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

அமெரிக்காவில் ஊர் சுற்றும் விக்னேஷ் & நயன்தாரா

Thursday, January 03, 2019
Tags


நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2 காதல்களில் தோல்வியடைந்து 3வதாக டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமானார். நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பிலிருந்து இந்த காதல் தொடர்கிறது.
இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். வெளிநாடுகளில் நெருக்கமாக நின்று படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்திலும் போடுகிறார்கள்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள் என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் இருவேறு தகவல்கள் பரவுகின்றன. சென்னையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லாமல் காதலை தொடர்கிறார்கள்.

நயன்தாராவை விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது ரசிகர்கள் விக்னேஷ் சிவனை வற்புறுத்தி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த ஆண்டாவது இருவரும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள். அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து இரு வேடங்களில் நடித்துள்ள ‘ஐரா’ மற்றும் ‘கொலையுதிர்காலம்’ ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன. 

இந்நிலையில், சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.