நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

திருகோணமலையில் உள்ள மான்களுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து குவிந்த உதவிகள்!
திருகோணமலையில் இருக்கும் மான்களுக்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் உதவி செய்துள்ளனர். இந்த தகவலை சமூக வலைதளத்தில் நபர் ஒருவர் பதிவுயிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மக்கள் அனைவரும் திருகோணமலை என்று சொல்லும்போது அங்கிருக்கும் மான்கள்தான் அவர்களின் ஞாபகத்திற்கு வரும்.

திருகோணமலையில் இருக்கு மான்கள் அன்றாடம் உணவுக்காக அலைந்துதிரிந்து பொழித்தின்களை உண்டு இறந்துபோகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றதால் திருகோணமலை ரோட்டரி கழகம் அவற்றுக்குரிய உணவகம்/உறைவிடம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த சில வருடங்களாக முயன்றுவந்தது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த விக்கி மற்றும் அவரின் மனைவி கரேன் உதவுவதற்கு முன் வந்துள்ளார்கள். திருகோணமலை நகரசபையின் உதவியுடன், முக்கியமாக நகர சபைதலைவர் இராசநாயகம் பங்களிப்புடன் உணவகம்/ உறைவிடம் அமைக்கப்பட்டுள்ளது

இவ் அழகிய மான்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதிகளுடன் கூடிய கொட்டில் ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர் கிடைக்கக்கூடிய வகையில் நீர்தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான உணவு மரக்கறி சந்தையில் இருந்து துப்பரவு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட சீமெந்து தரையில் இடப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு அரச அலுவலகத்தில் வேலைசெய்யும் அதிகாரிகளின் வருட இறுதி குத்தாட்டம்


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!