நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, January 19, 2019

சம்பந்தன் சுமந்திரனை துரோகியாக்கி மகிந்தவை மகான் ஆக்கிட்டிங்களேப்பா இதுதான் பூகோள அரசியலா?ஒரு இனத்தின் தார்மீக கோபத்தையும் கொதிப்பையும் மடைமாற்றுபவர்களே அந்த இனத்தின் மாபெரும் துரோகிகளாவர். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணம் சம்பந்தன், சுமந்திரன்!

அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதற்கு காரணம் சம்பந்தன் சுமந்திரன்!

போரில் இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணம் சம்பந்தன் சுமந்திரன்!

இவ்வளவு கொடூரங்களையும் புறிந்த மகிந்த யாழ்ப்பாணத்திற்கு வருகிறார், மக்களே எமக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார் அதைக்காணவும் ஒரு கூட்டம் அவருக்கு வாக்களிக்கவும் ஒரு கூட்டம். எந்த எதிர்ப்பும் இல்லை ஆர்ப்பாட்டமும் இல்லை. இதைப்பார்த்து சர்வதேச சமூகம் உங்களிடம் கேள்வி கேட்காதா என் இனிய புலம்பெயர் போராளிகளே? மகிந்தவை இனப்படுகொலையாளி என்கின்றீர்கள் ஆனால் அவரோ அந்த இனத்தின் கைதட்டல் நடுவே மேடையேறுகிறார் எவரும் கருப்புக்கொடி காட்டவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை போராட்டம் நடத்தவில்லை அதன் அர்த்தம் என்ன என்று கேள்வி கேட்காதா? 

மைத்திரி வந்தால் கழுத்தில் கருப்புத்துணியோடு ஆர்ப்பாட்டம் மகிந்த வந்தால் பொத்திக்கொண்டு ஓட்டம் மிஸ்டர் கஜேந்திரகுமார் மகிந்தவின் முன் நீங்கள் குரைக்க மாட்டீர்களா? அவருக்கு கருப்புக்கொடி காட்டமாட்டீர்களா?  ஓ எஜமானைப் பார்த்து எந்த நாய்தான் குரைத்திருக்கிறது.

எவ்வளவு கேவலமான இனமாக எம்மினத்தை மாற்றி அமைக்கிறார்கள் என்று பாருங்கள்...நமக்கு எம்மையே எதிரியாக்கிவிட்டு அவர்கள் எம்மை ஆள்கிறார்கள் துரோகியார்? தியாகி யார் என்று தெரியாமல் நாம் கோசமிடுகிறோம் என்ன கொடுமை...
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!