நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

யாழில் பழக் கடை வியாபாரிக்கு வருகிறது ஆப்பு

Thursday, January 03, 2019
Tagsயாழில் பழக் கடை வியாபாரிக்கு வருகிறது ஆப்பு
தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை செய்தார் எனும் குற்றச்சாட்டில் வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சாவகச்சேரி பொதுச்சந்தையில் வாழைக்குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ்க்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் அங்கு சென்றபோது குறித்த வியாபாரி தடைசெய்யப்பட்ட மருந்தினை வாழைக்குலைக்கு விசிறிக்கொண்டு இருந்தபோதே பிடிபட்டார்.

இதையடுத்து குறித்த வியாபரிக்கு எதிராக சுகாதார பரிசோதகர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.