நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 4, 2019

திருத்தங்களுக்காக முக்கிய வர்த்தமானி ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு

புதிய அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மேற்கொள்ளப்படவேண்டிய சில திருத்தங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி பரிசீலித்ததன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள், தமது அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்ததன் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சில பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் வாரமளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.