நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, January 14, 2019

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்! அனலைதீவில் வசிக்கும் மக்களின் பழைய நினைவு   
   
   
 
அனலைதீவில் வசிக்கும் மக்களெல்லாம் தம் அன்றாட தேவைகளுக்காக ஊர்காவற்றுறை அல்லது யாழ்ப்பாணம் நோக்கியே வந்து செல்வோம் அப்படி வருவதற்கு கடலில் மாத்திரம் சுமார் ஒன்றரை மணி நேரம் பயணிப்போம்.

அனலைதீவிலிருந்து எழுவைதீவு- காரைநகர் கடல்கோட்டை-கரைநகர் இறங்குதுறை-ஊர்காவற்றுறை இறங்குதுறை என்ற கடல் மார்க்கத்திலேயே பயணிப்போம்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இவ்வாறு பயணிக்கும் போது படகில் ஏறும் போதும் இறங்கும் போதும் கடற்படையினர் ஒவ்வொருவரையும் மறித்து சோதனைச்சாவடியில் சோதித்துதான் விடுவார்கள்.

அம்மாவின் சேலை நுணியை விரலில் சுற்றிக்கொண்டு கடற்படையின் சோதனைக்காக காத்திருந்த சிறுவர்களில் ஒருவனாக நானும் நின்றிருக்கிறேன் அதிலும் அரைமணி,ஒருமணி என அன்றைய அரைநாள் கடந்துவிடும்.
   
   
   
 
பின்பு பேரூந்துக்காய் போட்டி போட்டு இருக்கையில் இடம் பிடிப்போம் அம்மா வருவார் என அருகில் ஒரு பையை வைப்போம் அப்போது நடத்துனர் பிள்ளைகளை மடியில் வைத்திருங்கள் என்பார். ஒரு மணி நேரம் வைத்தியசாலைச் சிகிச்சைக்காக ஒருநாள் முடிந்துவிடும்.

2000ஆம் ஆண்டவில் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் கோவில் இறங்குதுறை பயன்பாட்டிற்கு வந்தது இதனால் ஒன்றரை மணி நேர கடல் பயணம் 40 நிமிடங்களாக இலகுவானது.

தற்போது ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் கோவில் இறங்குதுறை திருந்த வேலை காரணமாக போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் ஊர்காவற்றுறை இறங்குதுறையை நோக்கி ஒன்றரை மணிநேரம் பயணிக்கின்றோம். என அனலைதீவி வசிக்கும் மக்கள் அவர்களது பழைய நினைவுகளை தெரிவித்துள்ளனர்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!