நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

புத்தாண்டில் யாழ்ப்பாணத்தில் தர்ம அடி வாங்கிய இளைஞர் குழுவினர்: வசமாக மாட்டிக் கொண்ட நால்வர்


யாழ். கொக்குவில் பகுதியில் வழமை போன்று வன்முறையில் ஈடுபட முயற்சித்த ஆவாக் குழுவினருக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக சுமார் 90 பேருக்கும் அதிமான இளைஞர்கள் மோட்டார் வண்டியில் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். எனினும் புத்தாண்டு ஆகையால், பெரும்பாலான இளைஞர்கள் வீடுகளில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த 90 பேர் அடங்கிய இளைஞர்கள் குழுவை வழிமறித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால் அகப்பட்டவர்கள் மீது அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, அதில் நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டனர்.

தப்பியோடியவர்களில் சிலரின் மோட்டார் சைக்கிள்களும் சிக்கியுள்ளன. இதேவேளை மாட்டிக் கொண்டவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!