நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 9, 2019

மனிதனை போல பிறந்த ஆட்டுக்குட்டிக்கு மக்கள் செய்த வித்தியாசமான சடங்கு!

Wednesday, January 09, 2019
Tags


   
   
   
  மனித வடிவில் பிறந்த ஆட்டுக்குட்டி - பிறந்து இறந்ததால் இறுதி சடங்கை மனிதருக்கு செய்வதைப் போல் அப்பகுதி மக்கள் செய்தனர்.

பட்டுக்கோட்டை அருகில் உள்ள ராசன் வயல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி மறவன் வயல். இங்கு வசித்து வரும் தங்கவேல் அவரது வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது ஆடு ஒன்று இரண்டு குட்டியை ஈன்றது.

அதில் முதலாவதாக ஈன்ற குட்டி ஆட்டுக்குட்டி போல் இல்லாமல் மனிதனைப் போல் அமைப்பு அதாவது முகம் மற்றும் கை கால்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியும் மனிதனைப் போல் இருந்தது கண்டு அதிசயத்தனர்.

   
   
   
 

இதையடுத்து அந்த ஆட்டுக்குட்டி உயிரோடு இருக்கிறதா என்று பார்த்த போது அது இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் அந்த இறந்த மனித வடிவ ஆட்டுக்குட்டியை தண்ணீர் விட்டு கழுவி சாம்பிராணி, பத்தி வைத்து மாலையிட்டு மனிதருக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் செய்தனர்.