நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

தளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்

Thursday, January 03, 2019
Tags


இந்த வருடம் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி வருகிற 10ம் திகதி திரைக்கு வருகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பட வேலைகள் இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஜய்க்கு இது 63-வது படம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மெர்சல், தெறி படங்கள் வந்தன. இப்போது 3-வது தடவை இணைந்துள்ளனர். நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. அடுத்து இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இது அவருக்கு 59-வது படம். வக்கீல் வேடத்தில் வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படம் மே மாதமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் ‘காப்பான்’ படம் ஆகஸ்டு மாதமும் திரைக்கு வருகின்றன. கார்த்தியின் தேவ் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

விக்ரம் துருவ நட்சத்திரம், கடாரம் கொண்டான் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். கடாரம் கொண்டான் படத்தை ஏப்ரல் மாதமும், துருவ நட்சத்திரம் படத்தை மே அல்லது ஜூன் மாதத்திலும் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.