நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

இதயத் துடிப்பை மூன்று நாட்கள் நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை: மருத்துவ உலகில் சாதனை

Sunday, January 13, 2019
Tags


#Heart_surgery

சீன மருத்துவர்கள் இளம் பெண்ணொருவரின் இதயத்துடிப்பை சுமார்-72 மணிநேரம் நிறுத்தி வைத்து அறுவை செய்து சாதனை செய்துள்ளனர்.
சீனாவின் பியூஜியன் மாகாணத்திலுள்ள சியாமென் பல்கலைக்கழகத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. அப்படியே மயங்கி விழுந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் முதலில் அவருக்கு எக்மோ (ECMO) சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படாமையால் மருத்துவர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவருக்குப் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.
குறித்த அறுவைச் சிகிச்சையின் போது இதயத் துடிப்பிருக்கக் கூடாது என்பதற்காக இதயத்திலுள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதனால்,சுமார் 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின் மீண்டும் இதயத்தில் துண்டித்த குழாயை இணைத்து விட்டனர்.
இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால், குறித்த பெண்ணும் தற்போது நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுமார்-72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்தி வைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news