நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

மஹிந்த, கோத்தபாயவை கொலை செய்ய புலம்பெயர் அமைப்புகள் முயற்சி!! சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்

Sunday, January 13, 2019
Tags


   
   
   
  மீண்டும் வன்முறையை ஏற்படுத்துவதற்காக பாதளஉலக குழுக்களின் ஆதரவை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேற்கொண்டுள்ள முயற்சிகுறித்த தகவல்கள் புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்துள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

புளியங்குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பாதள உலகத்தவர்களுடன் எப்படி தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறித்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தகவல் வெளியிட்டார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

   
   
   
 

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட மிக முக்கிய பிரமுகர்களை இலக்கு வைப்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் பாதள உலகத்தவர்களிற்கு பணம் வழங்குகின்றனர் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.