நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, January 7, 2019

மைத்திரியின் புதிய வியூகம்! கொந்தளிக்கும் தமிழர்கள்

Monday, January 07, 2019
Tags


எந்தவொரு மாகாண ஆளுநரும் அதே மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது வேறு மாகாணத்தைச் சேர்ந்தவரை ஆளுநராக வேண்டும்.

ஹிஸ்புல்லா தான் பிறந்து வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தில் பண ரீதியான இலாபங்கள் தரக்கூடிய ஸ்தாபனங்களை வைத்திருக்கிறார். எனவே, அவரது நியமனம் பொருத்தமானதாகாது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள காளி கோவில் ஒன்றை, தான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்து, அந்த பதவியைப் பயன்படுத்தி அபகரித்து அதை முஸ்லிம் பள்ளிக்கும், அதில் ஒரு பகுதியை சந்தைக்கும் கொடுத்தேன் எனவும் வழங்கிய வாக்கு மூல ஒலி ஒளிநாடா ஆதாரமாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் நிதி உதவியுடன் ரிதி தென்னை என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் அரபு கல்லூரி ஒன்றின் கட்டுமானங்களில், ஊழல் செய்த வழக்கு ஒன்று கிழக்கு மாகாண நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அதில் சந்தேக நபராக ஹிஸ்புல்லா இருக்கின்றார்.

நீதிவானைமாற்றினேன், ஒரு நீதவானால் எழுதப் பட்ட தீர்ப்பை அப்படியே மாற்றி எழுதவைத்தேன் என்றவர் இந்த வழக்கிலும் தலையிடலாம்.அவர் சொந்த வாழ்க்கையில், அவர் வாழும் காத்தான் குடிகிராமத்திலேயே அவரது சமூகத்தினாலேயே எதிர்க்கப்படும் ஒருவராவார்.

ஒரு ஆளுநர் பதவி என்பது ஒரு நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டிய ஒரு பதவியாகும்.

ஆனால், நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முதல்வர் ஒரு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த நீண்ட நாள் உறுப்பினராக உள்ளதால் கட்சி ரீதியான சலுகைகளும் பாரபட்சங்களும் அவரால் முன்னெடுக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு.

பெரிய புல்லுமலை என்ற ஓரிடத்தில் நிறுவப்பட்டுவரும் தண்ணீர்ப் போத்தல் உற்பத்தித் தொழிற்சாலையின் உரிமைக்கோரியோர் இந்த ஆளுநரின் உறவினர்கள்தான் என்றே பேசப்படுகிறது மக்களின் போராட்டம் காரணமாக அந்தத்தொழிற்சாலை இயங்குநிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும், புதிய ஆளுநர் இதில் தலையிட நிறையவே வாய்ப்பு உண்டு.

இதேவேளை, ஆளுநர் நியமனத்தின் மூலம் கிழக்கில் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்கும் சில தமிழ் முன்னாள் பிரதியமைச்சர்கள் மறைமுக வரவேற்பினை செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி பக்கசார்பாக செயல்படாத ஒருவரை கிழக்கு மகாண ஆளுநராக நியமித்து இருக்கலாம் என்ற கருத்து கிழக்கு மகாண தமிழர்கள் மத்தியில் உண்டு. இந்த விடயம் தமிழ்ர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.