நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து செயற்படுவோம்!அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானங்களை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து செயற்படுவோம். அத்துடன் அரசியல் சதித்திட்டம் இடம்பெற்ற 56நாட்களில் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிடமுடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறிசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பெல்மதுல்ல பிரேதசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அரசியல் அதிகாரத்துக்கு வரமுடியாமல் போனவர்கள் நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் காலம் வரும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் என இவர்கள் செயற்பட ஆரம்பிப்பார்கள்.

அதிகாரம் கிடைக்காவிட்டாலும் நாங்கள் ஒருபோதும் நாட்டுக்குள் இனவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகமாட்டோம். அதற்கு இடமளிக்கவும் மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.ம்