நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 2, 2019

தமிழர் தாயகத்தில் அமெரிக்காவின் அதி முக்கிய குரு காலமானார்

Wednesday, January 02, 2019
Tags


அமெரிக்க ஐக்கிய நாட்டு நியு ஓர்லியன்ஸ் மாநிலத்தில் இருந்து இயேசு சபை துறவிகளுடன் 1948 ஆம் ஆண்டு குருத்துவ துறவற அருட் சகோதரராக பெஞ்சமின் கென்றி மில்லர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திகு வருகை தந்தார்.

அன்று முதல் இன்று வரை 74 ஆண்டுகள் மட்டக்களப்பில் வாழ்ந்து, வந்தவர் .இவர் ஒரு குருத்துவ துறவற மாணவனாக மட்டக்களப்பில் அடியெடுத்துவைத்த அருட்தந்தை குருத்துவ உருவாக்கத்தினை இலங்கையிலும் ,இந்தியாவிலும் பூர்த்தி செய்து விட்டு 24.03.1954 ஆண்டு இயேசுசபை குருவாக திருநிலைப்படுத்தபட்டார்.

அருட்தந்தை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபராகவும் ,கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளாராகவும் பணியாற்றிய அருட்தந்தை வடக்குகிழக்கு மாகாணங்களை போரின் கருமேகங்கள் சூழ்ந்துகொண்ட போது இராணுவ கெடுபிடிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் துயர் துடைக்க துரிதமாக செயற்பட்ட அருட்தந்தை கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தார் .

தனது பணிகாலத்தில் சமூக சேவைக்கு முன்னுரிமை அளித்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் , ரிட்டறிக் கழகம்,,புற்றுநோயாளர்கள் சங்கம் ,இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளார்

அருட்தந்தை தந்து பணிகாலத்தில் குருவானராக , துறவியாக , பங்குத்தந்தையாக , கல்வியாளராக , கல்லூரியின் அதிபராக ,விளையாட்டுப் பயிற்றுனராக, தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக , கட்டிடக் கலைஞராக , தோட்டத்தின் நிர்வாகியாக ,நிதியாளராக, மேலாளராக ,மக்களின் ,பாதுகாவலராக ,மனித உரிமைகள் செயற்பாட்டாளராக ,நீதியின் வேந்தராக ,அப்பாவிகளின் கைது மற்றும் கானாமல்போனின் சாட்சியாளராக பல்பரிமாணப் பனியின் ஈடுபட்ட அருட்தந்தை பெஞ்சமின் கென்றி மில்லர் அடிகளார் தனது 94 வயதில் காலமானார்

அருட்தந்தையின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக புனித மிக்கேல் கல்லூயில் வைக்கப்பட்டு இறுதி நல்லடக்க நிகழ்வுகாக புனித மரியாள் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இலங்கை ,பாகிஸ்தான் நாட்டுக்கான இயேசு சபை மேளானர் அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே அடிகளார் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தொடர்ந்து அருட்தந்தையின் உடல் மரியாள் பேராலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அருட்தந்தை பெஞ்சமின் கென்றி மில்லர் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம் நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா , மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை , திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ,இலங்கை சமாதான பேரவையின் இயக்குனர் ஜோன் வில்லியம் மற்றும் சர்வமத தலைவர்கள் ,அருட்தந்தையர்கள் ,அருட் சகோதரிகள் , பொது நிலையினர் , மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.