நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

வடக்கில் நோயாளர் காவு வண்டிகளிற்கு புதிய தடை

Thursday, January 03, 2019
Tags


வடக்கில் நோயாளர் காவு வண்டிகளிற்கு புதிய தடை
வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவுத்தல் விடுத்துள்ளது.

வட. மாகாண வைத்திய சாலைகளில் சேரும் ஊசிகள் (சிறிஞ்) , சிறிய மருந்துக்குப்பிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற நோயாளர் காவு வண்டிகளை வைத்தியசாலைகள் பயன்படுத்திவந்துள்ளன.

இதனால் நோயாளர் காவு வண்டியின் சேவை பாதிக்கப்படுவதுடன் , வண்டியின் சுகாதாரமும் பாதிக்கபடுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு நோயாளர் காவு வண்டிகளில் மருத்துவக் கழிவுகளை ஏற்றுவதை உடன் நிறுத்துமாறும் அதற்கு வேறு வண்டிகளை பயன்படுத்த சுகாதார பணிமனைகள் மூலம் நடவடிக்கை செய்துகொடுக்கப்படும் எனவும் வட. மாகாண சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு அறிவித்துள்ளது.