நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 16, 2019

கேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணையாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றிய விவகாரம் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த விசாரணைகள் இன்று (புதன்கிழமை) மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, எதிர்வரும் 18ஆம் திகதி மாநகர முதல்வர் அலுவலகத்தில், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்கள் நாட்டப்பட்டிருந்தன.

குறித்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர முதல்வரினால் அகற்றப்பட்டிருந்தது

இது தொடர்பில் சட்டவிரோதமான கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ். மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று காலை 11 மணிக்கு மாநகர முதல்வரை விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தனர்.

எனினும் வேலைப்பளு காரணமாக குறித்த விசாரணைகளுக்கு மாநகர முதல்வர் சமூகமளிக்கவில்லை.

இந்நிலையிலேயே இன்று அவரிடம் விசாரணைகள் மேள்கொள்ளப்பட்டன

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!