நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுப்பதை காணொளி எடுத்த இளைஞர் கைது!காணொளி உள்ளே

Thursday, January 03, 2019
Tags


வவுனியா பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இரு லீசிங் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01.2018) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவபொம்மையொன்று வவுனியா எ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது

அந்த உருவபொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட லீசிங் நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த இரு இளைஞர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தற்போது அவ்விடத்திலிருந்த பொலிஸ் உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது