நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பிரதேசங்கள் இருளில் மூழ்கும்!

இந்த வருட இறுதியில் தென்படும் சூரிய கிரகணம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகள் இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும், டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் இந்த கிரகணம் முழுமையான தென்படவுள்ள நிலையில், அந்த பகுதிகள் இருளில் மூழ்கும் என பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதியுடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இந்த சூரிய கிரகணம் தென்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.