நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

இலங்கையில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் இரத்தினபுரி , காலி , மாத்தறை போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை , புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக பலபிட்டி வரை கடலுக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அதன் உதவி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.