நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, January 5, 2019

ஈழத்தில் திடீரென்று மக்களை குலைநடுங்க வைத்த சம்பவம்!

Saturday, January 05, 2019
Tags


வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் மரம் தீப்பிடித்து எரிந்தமையால் பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள ஆலமரத்த்திற்கு அக்காணியில் வசிப்போர் வழைமைபோல விளக்கு ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றயதினம் ஏற்றப்பட்ட விளக்கின் மூலம் மரத்தில் தீ பற்றியுள்ளது.

இதனால் மரத்தின் ஒருபகுதி பற்றி எரிந்து முறிந்து விழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு பூவரசங்குளம் பொலிசாரால் தெரியபடுத்தபட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.