நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 16, 2019

யாழ். விகாரதிபதியை மகிழ்ச்சி அடையச் செய்த வட மாகாண ஆளுநர்வட மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் மகிழ்ச்சி அளிப்பதாக யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட சிறந்த தீர்மானமாகும் என தேரர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

   
   
   
 

மத, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை முதன்மையாக கொண்டு வட மாகாண ஆளுநர் சுரேன் ராஜவன் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் சர்வமத தலைவர்களை நேற்று சந்தித்துள்ளார். 

அதற்கமைய நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜதுரே விமல தேரர் தேரரை சந்தித்த வடக்கு ஆளுநர் அவருடன் நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மாகாணத்தில் ஏற்பட்டுள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாவும், அதற்காக தேரரின் ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் அவசியம் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் விரைவில் வடக்கில் போதை பொருள் பாவனையை ஒழிப்பதற்கு அர்ப்பனிப்புன் செயற்படுவதாகவும் அதற்காக சர்வமத தலைவர்களின் ஆதரவினை எதிர்பார்ப்பதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!