நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 8, 2019

இனம் தெரியாத நபர்களால் முஸ்லிம் சகோதருக்கு நேர்ந்த விபரீதம்

Tuesday, January 08, 2019
Tags


மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம் சகோகதர் ஒருவர் வேலை முடித்துவிட்டு விட்டிற்கு வரும் வேளையில் இனம் தெரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் ஐயங்கேனியை சேர்ந்த ஷஹீத் என்பவர் மட்க்களப்பில் பெற்றோலிய கோப்ரேஷனில் பணி புரிந்து விட்டு முகத்துவார வீதி வழியாக சவுக்கடியூடாக ஏறாவூர் வரும் வழியில், சவுக்கடி புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனம் தெரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள் இவரின் தலையை நோக்கி பொல்லுகளால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹெல்மேட் அணிந்திருந்த இவர் அடிகளை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடித் தப்பி முஸ்லிம் பிரதேசத்தில் நுழைந்து தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்ட நிலையில் அங்கிருந்து பிரதேச வாசிகள் காப்பாற்றி உடனடியாக குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளனர். 

தகவலை அறித்த உறவினர்கள் படுகாயமடைந்த முஸ்லிம் சகோதரனை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்த முயற்சித்துள்ளனர் ஏரியாத காரணத்தினால் விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஷஹீத்க்கு வெளிக்காயங்கள் எதுவுமில்லை. இதேவேளை தலை, நெஞ்சு நோவு இருக்கிறது வாந்தி எடுத்திருந்தாகவும், பேசுவதற்கு சிரமப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.