நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 30, 2019

மீண்டும் வளர்ச்சி அடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 0.6 வீதத்தில் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தகவலுக்கமைய நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.41 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.54 ரூபாயாக பதிவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி 16.4 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

எனினும் தற்போது இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வலுவடைந்து வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.