நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

யாழில் நிகழ்ந்தேறிய அதிர்ச்சி சம்பவம்! சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழில் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட சிறுமியையும், அவரது கணவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.வடமராட்சி கிழக்கில் சில தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது. 14 வயதான சிறுமியும், 23 வயதான இளைஞருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த குடும்பத்துடன் முரண்பட்ட ஒருவர் சிறுமியின் வயது குறித்த தகவலை சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கு வழங்க, இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இன்று இருவரும் கைதாகினர்.

இருவரும் பளை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் சிறுமி 72 நாள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.